Monday 22 July 2013

     உன்னாலும் முடியும்!!!

     


நான் கடந்த சில நாட்களாக பல மாணவர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்களுள் பலர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தை காணும் போதே அவர்களிடத்தில் ஒரு அந்நியம் தென்பட்டது. ஆனால் அதற்கான காரணம் அறிய உடனே முடிய வில்லை. நான் தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் அவர்கள் பெரும்பாலும் 85% மேல் எடுத்திருந்தார்கள். நான் ஒரு மாணவனிடம் ஏன் ஒரு வித பதற்றத்துடனும் அந்நியதுடனும் இருக்கிறாய் என்று கேட்டேன். அவன் கூறிய பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அண்ணே நான் 90% மார்க் வாங்கி இருக்கேன். ஆனா இப்போ நான் கல்லூரில சேர வேண்டி இருக்கு. அது கூட பேங்க்ல லோன் போட்டு படிச்சுடுவேன். ஆனா எனக்கு சரியா இங்கிலீஷ் பேச வராது. அது மட்டும் இல்லாம டவுன்ல இருக்க பசங்க எல்லாம் பொது அறிவு கம்ப்யூட்டர் கிளாஸ் அது இதுனு எல்லாம் போய்ட்டு நல்ல அறிவாளிகளா இருப்பாங்க. அவங்க கூட என்னால போட்டி போடணும்னு நினைச்சாலே பயமா இருக்கு. அதான் பதட்டமா இருக்குண்ணே என்றான். இன்றைய கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு இருக்கும் பல சவால்களில் இவையும் உள்ளன. ஆனால் இவற்றை வெல்ல தேவையானது ஆர்வம் ஒன்று மட்டுமே. ஆர்வம் மட்டும் இருந்து விட்டால் ஒன்றை எப்படியாவது அடையலாம்.ஏனெனில் ஆர்வம் நமக்குள் தேடலை தருகிறது. அந்த தேடலே உழைப்புக்கு படியாகவும் திசைகாட்டியகவும் உள்ளது.கூடவே தனம்பிக்கையையும் விட்டுவிடாதே. இதை உணர்ந்ததால் தான் இன்று அப்துல் கலாம்,கமல் ஹாசன், சிவ குமார், ரஜினி, சிவ அய்யாதுரை போன்றோர் சாதித்து காட்டினார்கள். ஆகவே உன்னாலும் முடியும்!!!!இதில்  சற்றும் ஐயம் இல்லை!!!!

Thursday 23 May 2013

வணக்கம்

               

அனைவருக்கும் என் வணக்கங்கள்.  நான் இங்கு வெளியிடும் பதிப்புகள் யாவையும் நான் பல்வேறு நூல்கள்,செய்தித்தாள்கள், மற்றும் என் வாழ்நாள் அனுபவம் ஆகியவற்றிலிருந்து இன்றைய மக்களுக்கு தேவையான சில செய்திகளை வெளியிடுகிறேன்.ஆகவே இந்த தளத்தில் நீங்கள் காணும் பதிப்புகள் சிலவற்றை முன்பே எங்கேனும் படித்திருக்கலாம் அல்லது கேள்விபட்டிருக்கலாம். மேலும் இந்த செய்திகள் யாவும் அனைவருக்கும் தெரிந்தவையே.